Disaster Alerts 03/12/2020

State: 
Tamil Nadu
Message: 
சூறாவளி புயல் புரெவி - 3.12.2020 - மாலை 6.00 மணி நிலவரம் சூறாவளி புயல் புரெவி மேற்கு நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் தற்போது பாம்பனுக்கு அருகில் Lat. 9.2°N and Long. 79.3°E நிலைகொண்டு , மன்னாருக்கு 40கி.மீ மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலும், கன்னியாகுமரிக்கு 230கி.மீ கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ காற்று வேகத்துடன் மையம்கொண்டுள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை நெருங்கி பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழக கடலோரத்தில் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை விடியற்காலை மணிக்கு 70- 80 கி.மீ அதிகபட்சமாக 90கி .மீ காற்று வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆரம்பித்து பின்னர் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் வரை காணப்படும் பலத்த காற்று எச்சரிக்கை மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 12 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56 - 64 செ .மீ வேகத்தில் காணப்படும். வட தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 13 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-64 செ .மீ வேகத்தில் காணப்படும் கனமழை எச்சரிக்கை தென்தமிழகத்தில் (கன்னியாகுமரி,திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யக்கூடும். மற்ற கடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் மீனவர்களுக்கான எச்சரிக்கை மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது கடல் கரை பகுதிகளில் கடல் பெருக்கம் 1 மீ உயரத்தில் காணப்படும். இதனால் தென் தமிழக கடற்கரை மாவட்டங்களில் தாழ்வான கரையோர பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம் , தூத்தூக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது கரையோரங்களில் உள்ள குடிசை பகுதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
11
Message discription: 

Start Date & End Date: 
Thursday, December 3, 2020