You are here
Disaster Alerts 03/12/2020
State:
Tamil Nadu
Message:
சூறாவளி புயல் புரவி - 2.12.2020 - இரவு 11 மணி நிலவரம்
சூறாவளி புயல் புரவி மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகில் இன்று (2.12.2020) நள்ளிரவு மணிக்கு 80-90 கி.மீ. அதிகபட்சமாக 100 கி.மீ காற்று வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி காலை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூறாவளி புயல் மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ காற்று வேகத்தில் பாம்பனுக்கு அருகில் 3ஆம் தேதி மதியம் நிலைகொண்டு பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழக கடலோரத்தில் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே 3 ஆம் தேதி இரவிலிருந்து 4 ஆம் தேதி விடியற்காலை மணிக்கு 70- 80 கி.மீ அதிகபட்சமாக 90கி .மீ காற்று வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் 3 ஆம் தேதி முற்பகலில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பித்து பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் வரை காணப்படும்
பலத்த காற்று எச்சரிக்கை
2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
03.12.2020 & 04.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 2.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 13 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 64 - 77 செ .மீ வேகத்தில் காணப்படும்.
வட தமிழ்நாடு : பேரலைகள் 2.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 64-77 செ .மீ வேகத்தில் காணப்படும்
கனமழை எச்சரிக்கை
தென்தமிழகத்தில் (கன்னியாகுமரி,திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2.12.2020 - 4.12.2020 வரை கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கடல் கரை பகுதிகளில் கடல் பெருக்கம் 1 மீ உயரத்தில் காணப்படும். இதனால் தென் தமிழக கடற்கரை தாழ்வான கரையோர பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம் , தூத்தூக்குடி , திருநெல்வேலி , இராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது
கரையோரங்களில் உள்ள குடிசை பகுதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது
எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
தகவல் மூலம் : இந்திய வானிலை மையம் மற்றும் இன்காய்ஸ் - 2.12.2020 இரவு 11 மணி செய்தி குறிப்பு
தகவல் தொகுப்பு : ம .சா . சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் , அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் .
Disaster Type:
State id:
2
Disaster Id:
11
Message discription:

Start Date & End Date:
Thursday, December 3, 2020