Disaster Alerts 25/11/2020

State: 
Tamil Nadu
Message: 
அதி தீவிர புயல் நிவார் குறித்த எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று இன்று இரவு மற்றும் நாளை 26.11.2020 அதிகாலை பலத்த சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 இரவு 11.30 மணி வரை 9 முதல் 18 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 75-155 செ .மீ வேகத்தில் காணப்படும் தென்தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 10 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும் உள்கடல் பகுதியில் - பலத்த காற்று எச்சரிக்கை மோசமான வானிலையுடன் கூடிய பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 110-120 கி.மீ அதிகபட்சமாக 135 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து மணிக்கு 120-130 கி.மீ அதிகபட்சமாக 145 கி.மீ வேகத்தில் 25 ஆம் தேதி மதியத்திலிருந்து 26 ஆம் தேதி அதிகாலை வரை வீசக்கூடும் கடலோர பகுதிகளில் - பலத்த காற்று எச்சரிக்கை மோசமான வானிலையுடன் கூடிய பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் வீசக்கூடும். பின்னர் இது மதியம் படிப்படியாக அதிகரித்து 25 இரவு மற்றும் 26 ஆம் தேதி அதிகாலை 120-130 கி.மீ அதிகப்படியாக 145 கி.மீ வேகத்தில் புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் வீசக்கூடும். மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருவாரூர் கடலோர பகுதிகளில் 25 இரவு மற்றும் 26 ஆம் தேதி அதிகாலை வரை வீசக்கூடும் கனமழை எச்சரிக்கை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவாண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால்) முழுவதும் நவம்பர் 25,26,தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும். புயல் கரையை கடக்கும் போது அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது கடல் பெருக்கம் மற்றும் கொந்தளிப்பு கடல் பெருக்கம் மற்றும் கொந்தளிப்பு கடற்கரைப்பகுதிகளில் 1.5 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும். மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை : மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும், குடிசை பகுதிகளில் வசிப்போர் புயல் பாதுகாப்பு இல்லங்களுக்கு செல்லுமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் புயல் கரையை கடந்தபின்னரும் அதன் தாக்கம் அடுத்த 6 மணி நேரம் வரை தொடாந்து பின்னர் மெதுவாக படிப்படியாக குறைந்து வலுவிழக்க கூடும், இராமநாதபுரம், தொண்டி, கோட்டைபட்டினம் பகுதி மீனவ நண்பர்களுக்கு காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு விசைப்படகுகள் (IND -PY .PK -MM - 978 மற்றும் IND - Y .PK -MM - 972) இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுடன் வந்த மற்ற விசைப்படகுகள் மல்லிப்பட்டினத்தில் கரை சேர்ந்துள்ளன. இந்த இரு விசை படகுகளும் இன்று காலை 6 மணி வரை மற்ற விசைப்படகுகளுடன் தொடர்பில் இருந்துள்ளன. தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தங்களுக்கு இந்த விசைப்படகுகள் ஏதேனும் உங்கள் பகுதியில் கரை சேர்ந்திருந்த தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியபடுத்தவும் - 9443261799
State id: 
2
Disaster Id: 
13
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, November 25, 2020