Disaster Alerts 25/11/2020

State: 
Tamil Nadu
Message: 
நிவார் புயல் குறித்த எச்சரிக்கை - 25.11.2020 இரவு 1.30 மணி நிலவரம் - source INCOIS-IMD joint cyclone bulletin) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் சூறாவளி புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 10.0°N and longitude 82.3°E, ல் கடலூருக்கு 340 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், புதுச்சேரிக்கு 350 கி.மீ தென்கிழக்கு திசையிலும், சென்னைக்கு 400 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரகூடும். பின்னர் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளிபுயலாக மாறி இன்று 25 ஆம் தேதி மாலை (late evening) காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மணிக்கு 120-130 கி.மீ அதிகபட்சமாக 145 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 இரவு 11.30 மணி வரை 9 முதல் 17 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 75-155 செ .மீ வேகத்தில் காணப்படும் தென்தமிழ்நாடு : பேரலைகள் 26.11.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 10 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும் உள்கடல் பகுதியில் - பலத்த காற்று எச்சரிக்கை 25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 110-120 கி.மீ அதிகபட்சமாக 135 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் 25 ஆம் தேதி காலையிலிருந்து வீசக்கூடும். பின்னர் இது படிப்படியாக அதிகரித்து மதியம் மற்றும் இரவு நேரங்களில் 120-130 கி.மீ அதிகப்படியாக 145 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் கடலோர பகுதிகளில் - பலத்த காற்று எச்சரிக்கை 25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் 25 ஆம் தேதி காலையிலிருந்து வீசக்கூடும். பின்னர் இது படிப்படியாக அதிகரித்து மதியம் மற்றும் இரவு நேரங்களில் 120-130 கி.மீ அதிகப்படியாக 145 கி.மீ வேகத்தில் புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் வீசக்கூடும் கனமழை எச்சரிக்கை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் நவம்பர் 25,26,27 தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும். கடல் பெருக்கம் மற்றும் கொந்தளிப்பு கடல் பெருக்கம் மற்றும் கொந்தளிப்பு கடல்கரைப்பகுதிகளில் 1.5 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும். மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை : மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 26 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
11
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, November 25, 2020